செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:29 IST)

கடற்கரை முதல் கூடுவாஞ்சேரிக்கு கூடுதல் மின்சார ரயில்: கிளாம்பாக்கம் பயணிகளுக்கு வசதியா?

Kilambakkam
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கடற்கரை முதல் கூடுவாஞ்சேரி வரை  கூடுதலாக மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வண்டலூரில் இறங்கி அங்கிருந்து மிக எளிதாக கிளாம்பாக்கம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் ஆறு மாதத்தில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை முதல் கூடுவாஞ்சேரி வரையிலான கூடுதல் மின்சார ரயில்கள் குறித்த தகவல் இதோ:

கடற்கரையில் இருந்து நாளை முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.

அதேபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva