1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (17:23 IST)

ஜெயலலிதா நினைவிடத்திற்கு கூடுதலாக நிதி: தமிழக அரசு உத்தரவு!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு கூடுதலாக நிதி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல், எம்ஜிஆர் சமாதி அருகே புதைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூபாய் 50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நினைவு மண்டபத்தின் பணிகள் இரவு பகலாக நடந்து வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதாவின் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த நினைவிடத்திற்கு கூடுதலாக ரூபாய் 21.7 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 ஆண்டு பராமரிப்பு, மின் கட்டணம் ஆகியவற்றுக்காக இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஜெயலலிதா நினைவிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் தேர்தலுக்கு முன் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது