வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (21:44 IST)

எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு வரும் ஏப்ரல் 5 ஆம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ரூபாய் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து,  எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் விசாரணை முடியும் வரை நிரந்த  வைப்பீடுகளை முடக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு வரும் ஏப்ரல் 5 ஆம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.