Daily Horoscope
✕

11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு எப்போது?

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 19 மே 2020 (12:58 IST)
11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.
 
அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 – மொழிப்பாடம், ஜூன் 17 – ஆங்கிலம், ஜூன் 18 – கணிதம், ஜூன் 22 – அறிவியல், ஜூன் 24 – சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும். 
 
மேலும் விடுபட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

எல்லாம் காட்டு

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த தேர்தல் ஆணையம்...

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை...

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments