1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EVKS Elangovan treatement hospital statement

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை..!

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் உடல் நிலையை தற்போது சீராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதய பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து உடல் நலம் தேறி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமாக இருந்த நிலையை தாண்டி தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா.. அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? காயத்ரி ரகுராம் கேள்வி