வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (14:33 IST)

அண்ணாமலை என்னைவிட பெரிய மனிதர்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

EVKS
அண்ணாமலை என்னை விட பெரிய மனிதர் என்றும் அதனால் அவருடைய பேச்சுக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். 
 
இன்று அவர் வேட் மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலையை பொருத்தவரை என்னை விட அவர் பெரிய மனிதர் என்றும் நான் அவரை விட சிறிய மனிதர் என்றும் எனவே அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்றும் ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன் என்றும் திமுகவினர் மற்றும் திமுக அமைச்சர்கள் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர் என்பது அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran