செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (16:39 IST)

தவணை தொகையை செலுத்தாத முதியவரின் வீடு சூறை.. வங்கி அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

தவணைத் தொகை செலுத்தாத முதியோரின் வீட்டை வங்கி அதிகாரிகள் சூறையாடிய நிலையில் அந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பல்லடம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முதியவர் ஒருவர் தவணை முறையில் ஈக்யூடாஸ் வங்கியில் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் வறுமையின் காரணமாக தவணை தொகையை செலுத்த தவறியதால் வங்கி அதிகாரிகள் அவரது வீட்டை சூறையாடினார். 
 
மேலும் முதியவரை வீட்டில் இருந்து வெளியேற்றி வீட்டை பூட்ட ஈக்விடாஸ் வங்கி அதிகாரிகள் முயன்றதாகவும் தெரிகிறது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் தவணைத் தொகையை 20 நாட்கள் செலுத்த தாமதித்ததால் வங்கி அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வங்கி அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva