செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 அக்டோபர் 2025 (08:09 IST)

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?
கரூர் சம்பவத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் கூட்டத்தில் சில தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தூக்கி காட்டும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிய கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி காட்டப்பட்டது தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
 
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குமாரபாளையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சிலர் தங்களது கொடியை உயர்த்தி பிடித்தனர். அப்போது, "கூட்டணிக்கு தொண்டர்கள் மத்தியில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டதாக" எடப்பாடி பழனிச்சாமி பேசியதை மக்கள் ரசித்தனர்.
 
அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து போட்டியிட்டால் திமுகவை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும், இந்த நிகழ்வின் மூலம் தெரிய வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva