தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
டிடிவி தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகர்ன் “ இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பி.எஸ்-ஸையும் வீட்டிற்கு அனுப்பி விடுவோம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி “ எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிட்ட எனக்கு ஒரு முறை கூட பிரச்சாரம் செய்ய தினகரன் வந்ததில்லை. ஒரு நாளில் கட்சியில் சேர்ந்து துணை பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர் அவர். தற்போது ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்து நாடகம் ஆடுகிறார். நாங்கள் வேலை முடிந்தால் வீட்டிற்கு செல்வோம். ஆனால், தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். அது என்ன மாதிரியான மாமியார் வீடு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
எம்.எல்.ஏக்களை அவர் சிறை வைத்திருக்கிறார். அவர்களை வெளியே விட்டால் எங்கள் அணியை தேடித்தான் அவர்கள் வருவார்கள். அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் முடப்பட்டு விட்டன” என அவர் பேசினார்.