திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (13:45 IST)

நவ.1 ஆம் தேதியே தமிழ்நாடு நாள்: ஜூலை 18-ஐ ஏற்க மறுக்கும் ஈபிஎஸ்!!

தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டு வரும் நிலையில் அது குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 

 
முந்தைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழக நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நில அமைப்பியல் ரீதியாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. நவம்பர் 1 ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட நவம்பர் 1, தமிழ்நாடு தினம் நன்னாளில் 'தமிழ் கூறும் நல்லுலகம்' உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் அவர்தம் மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.