Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உள்கட்சி தேர்தல்; போட்டியின்றி தேர்வாகும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (15:18 IST)
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான உள்கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் கலந்து கொள்ள 5 ஆண்டிற்கும் மேல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்கான வேட்புமனு தாக்கல் 3ம் தேதி தொடங்கி நடந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனௌ நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மனு அளித்துள்ள நிலையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இவர்களது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் போட்டியின்றி மீண்டும் தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேகமலையில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.. இல்லையேல் துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இனி அவ்வளவு எளிதில் சிம்கார்டு வாங்க முடியாது.. மத்திய அரசின் புதிய கெடுபிடிகள்...

இந்தியாவின் தேசிய பறவை காகம்? பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் ஏற்பட்ட குழப்பம்...

சியான் விக்ரம் - லார் கிப்பான் குரங்கு விவகாரம்!.. 11 அரியவகை விலங்குகள் மீட்பு!...

யுஜிசி நெட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய மனு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments