இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தாயார் சென்னையில் இன்று காலமானார்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தாயார் சென்னையில் இன்று காலமானார்
பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரிமா பேகம் அவர்கள் சற்று முன் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரிமா பேகம் அவர்கள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக கூறப்படுகிறது
ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் மறைவை அடுத்து திரையுலகினர் ஏஆர் ரஹ்மானின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது