திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:14 IST)

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்!

ops eps
ஓபிஎஸ் உடன் இணைந்து எதிர்காலத்தில் செயல்பட முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பு அளித்ததை அடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
 
இந்த மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி ஓபிஎஸ் என்ற தனிநபரின் நலனுக்காக தீர்ப்பு அளித்துள்ளதாகவும் அதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் நலனுக்காக தீர்ப்பு அளிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது
 
மேலும் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்றும் ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது 
 
மேலும் அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்ட வில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு என்றும் 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.