வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:58 IST)

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நீடிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இது நாள் வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு http://www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்பிற்கு பிறகு நீலகிரிa மாவட்டத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran