1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:10 IST)

பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களிடையே பரபரப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கான நெறிமுறைகளின்படி செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் உள் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் உடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை அறிய www.annauniv.edu, மற்றும் www.aucoe.annauniv.edu ஆகிய இணைய தளங்களில் சென்று பார்க்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது