1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement Directorate Conducts Raids at 5 Locations in Chennai

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. தொழிலதிபர்களுக்கு குறியா?

அமலாக்கத் துறை
சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக, சென்னை மாநகரில் ஐந்து இடங்களில் இன்று  காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சோதனை நடைபெறும் இடங்களில் அமைந்தகரை, சூளைமேடு, மற்றும் நெற்குன்றம் ஆகிய பகுதிகள் அடங்கும்.
 
ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் செய்து வரும் தொழில் அதிபர்களின் இல்லங்களில் இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சோதனை நடவடிக்கை நிறைவுற்ற பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் நகை குறித்த முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran