யானைக்கு டீ வாங்கி கொடுக்கும் பாகன்: வைரலாகும் வீடியோ

elephant
siva| Last Updated: வெள்ளி, 27 நவம்பர் 2020 (20:17 IST)
யானைக்கு டீ வாங்கி கொடுக்கும் பாகன்: வைரலாகும் வீடியோ
தூத்துக்குடியில் கோவில் யானை ஒன்றுக்கு யானைப்பாகன் டீ வாங்கிக் கொடுக்கும் காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. ஆதிநாயகி என்ற யானைக்கு தினமும் காலையும் மாலையும் அந்த யானையை கவனித்து வரும் யானைப்பாகன் குளிக்க அழைத்துச் செல்வது வழக்கம்
 
அதன் பின்னர் குளித்து விட்டு வரும் போது யானைக்கு அங்கு உள்ள உணவகங்களில் இட்லி வடை வாங்கி கொடுப்பது ஒரு டீயும் வாங்கி கொடுக்கிறார். தேனீர் கடையில் சூடான டீயை வாங்கி அதை ஆற்றி யானைப்பாகன் கொடுப்பதும் அதை அந்த யானை குடிப்பதுமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மனிதர்களைப் போலவே யானையும் இட்லி வடை சாப்பிட்டுவிட்டு டீ குடிக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 


இதில் மேலும் படிக்கவும் :