வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (20:51 IST)

சாலையில் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

electric scooter
சாலையில் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!
உளுந்தூர்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனையாகி வருகிறது என்பது தெரிந்ததே
 
ஆனால் அதே நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்னர் உளுந்தூர்பேட்டையில் புருஷோத்தமன் என்பவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்தக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்ததை அடுத்து புருசோத்தமன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்தார்
 
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.