வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:43 IST)

ஹீரோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: எப்போது அறிமுகம்?

hero scooter
ஹீரோ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: எப்போது அறிமுகம்?
உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களுக்கு டிமாண்ட் இருந்துவரும் நிலையில் இந்தியாவிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு பெருகி வருகிறது 
 
ஏற்கனவே ஓலா, டாட்டா, மஹிந்திரா  உள்பட பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வரும் நிலையில் ஹீரோ நிறுவனமும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது
 
இந்த நிலையில் தனது நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை சுமார் ஒரு லட்சம் இருக்கலாம் என்றும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் தரமான பேட்டரி உள்பட பல நவீன வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெறும் என்றும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.