வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (12:48 IST)

மின்கம்பம் விழுந்து விபத்து: பணியில் இருந்த மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி!

Death
மதுரையில் மின்கம்பம் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதி பூ மார்க்கெட் அருகே பழுது ஏற்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது  மின்கம்பம் திடிரென விழுந்ததில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சின்னராசு மகன் முத்துக்குமார்( வயது 46 ) மீது விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிசில் இருந்த முத்துக்குமார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பணியின் போது மின்கம்பம் மேல் விழுந்து மின் வாயரிய ஊழியர்  முத்துக்குமார் உயிரிழந்த சம்பவம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.