வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (18:28 IST)

நம்மவர் டிவி: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் கமல்?

இன்றைய நிலையில் அரசியல் கட்சி என்று இருந்தால் அக்கட்சிக்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இருந்தால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகள், செய்திகள் மக்களை சென்றடைவதாக நம்பப்படுகிறது.  
 
அந்த வகையில் அரசியலில் களமிரங்கவுள்ள ரஜினி டிவி சேனல் ஒன்றை துவங்க உள்ளதாகவும் அதற்காக சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தியும் உள்ளார் ரஜினிகாந்த்.  
 
இந்நிலையில் அடுத்து கமல் நம்மவர் டிவி என்று ஒன்றை துவங்க உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. கமல் ஹாசன் டிவிட்டரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் மக்களுடன் நேரடியாக தனது கருத்துக்களை பகிர பயன்படுத்தினார். 
 
ஆனால், கமல் அரசியலுக்கு வரும் முன்னரே அவரது ரசிகர்கள் அவரை டிவி சேனல் ஒன்றை துவங்கும் படி கேட்டு வந்தனர். தற்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய பின்னரும் சேனலை துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகிறது. 
 
ஆனால், இப்போது ரஜினி சேனலை துவங்க உள்ளதாக அறிவித்து உள்ளதால் கமல் சேனலை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கு இப்பொழுதே நம்மவர் டிவி என்ற பெயர் வைத்துவிட்டனர்.