ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:14 IST)

சசி.க்கு ஆப்பு வைக்குமா தேர்தல் ஆணையம்?: டெல்லி விரைகிறார் எம்பி மைத்ரேயன்!

சசி.க்கு ஆப்பு வைக்குமா தேர்தல் ஆணையம்?: டெல்லி விரைகிறார் எம்பி மைத்ரேயன்!

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிமுக சட்ட விதிகளின்படி அவரது நியமனம் செல்லாது. இதனை எதிர்த்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் கடிதம் அளித்திருந்தார்.


 
 
இதனையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு சென்றார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன். இதனையடுத்து அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என மதுசூதனனே தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார்.
 
இதனால் சசிகலாவால் மதுசூதனன் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மதுசூதனன், சசிகலா புஷ்பா ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதத்தின் விசாரணை இன்று பிறபகல் 2.45 மணிக்கு வருகிறது.
 
சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது அதிமுக சட்ட விதிகளின்படி செல்லுமா செல்லாத என்ற விசாரணை இன்று நடைபெறும். இதில் கலந்து கொள்ள அதிமுக பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் தலைமையில் அவரது ஆதரவு எம்பிக்கள் டெல்லி விரைகின்றனர்.
 
சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால். சசிகலா பொதுச்செயலாளராக அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் செல்லாதாகவிடும், ஓபிஎஸ் அணி எளிதாக கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுவிடும்.