1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:46 IST)

தமிழகத்தைபின்பற்றுங்கள்: புதுவை அரசுக்கு நாராயணசாமி அறிவுரை!

விநாயகர் சதுர்த்தி விஷயத்தில் தமிழகத்தை பின்பற்றுங்கள் என புதுவை அரசுக்கு புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார்
 
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை என்றும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கத் தடை என்றும் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு பாஜக உள்பட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி திருவிழா விஷயத்தில் தமிழகத்தை பின்பற்றுங்கள் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார் 
 
மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லாத நிலையில் புதுவையில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளித்து கொரோனாவை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் விநாயகர் சிலைகளை நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது