1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:34 IST)

குழந்தை உயிரிழப்பு ஏன்? எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென என்ற காலை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் குழந்தை உயிர் இழந்தது ஏன் என்பது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
அதில் கையை இழந்த ஒன்றை வயது குழந்தை பாக்டீரியா தொற்று ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததாகவும் வைட்டமின் குறைபாடு பாதிப்பால் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  அந்த குழந்தைக்கு உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva