1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 19 அக்டோபர் 2016 (16:24 IST)

ஜெயலலிதாவை பார்க்க இலங்கையில் இருந்து வந்த ஈழத்தமிழர் அமைப்பினர்!

ஜெயலலிதாவை பார்க்க இலங்கையில் இருந்து வந்த ஈழத்தமிழர் அமைப்பினர்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு தரப்பினர் மருத்துவமனை வந்து உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.


 
 
இந்நிலையில் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் நட்புறவு மையம் சார்பாக ஒரு குழுவினர் நேற்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மூத்த அமைச்சர்களிடம் விசாரித்துள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதா, ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை, தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு, தனித் தமிழீழமே தீர்வு என பல தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றியவர்.
 
அவர் விரைவில் குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என ஈழத்தமிழர் சார்பில் தெரிவித்துள்ளனர்.