செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (20:11 IST)

பிப்ரவரி 15 வரை கல்லூரிகள் மூடப்படும்: மகாராஷ்டிரா அரசு!

பிப்ரவரி 15ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது பிப்ரவரி 15 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாது என்றும், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் பல்கலைகழகங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் அவருடைய இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது