1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (13:42 IST)

கிளி ஜோசியம் பாக்கலயோ கிளி ஜோசியம்... ஸ்டாலினுக்கு ஆப்பு!!

கிளி ஜோசியம் பார்த்ததில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கரூர் கிராமம் ஒன்றில் சுற்றுலாத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு கிளி ஜோசியம் பார்த்தார்.
 
அப்போது எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவாரா என்று கேட்டுள்ளார். இதனையடுத்து கூண்டை விட்டு வந்த கிளி  சிவன் பார்வதி, விநாயகர் இருந்த படத்தை எடுத்துக்கொடுத்துள்ளது. இதனையடுத்து கிளி ஜோசியர் எடுத்த எடுப்பிலேயே சாமி படம் வந்ததால் உங்கள் விருப்பம் நிறைவேறும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் என தெரிவித்துள்ளார்.