1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (12:17 IST)

வேளாண் பட்ஜெட்னு ஒன்னு இல்லவே இல்லை..! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்படி ஒன்றே இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முறை தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “வேளாண் பட்ஜெட்டுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்னும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி” என தெரிவித்துள்ளார்.