திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (20:06 IST)

காவிரிக்காக பலர் போராடலாம், ஆனால் வெற்றி அதிமுகவிற்கே: முதல்வர் பெருமிதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காவிரி ஆணையம் அமைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  
 
ஆனால், இன்னும் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி ஆணையம் அமைக்கப்படவில்லை. காவிரி ஆணைய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடகா அதன் உறுப்பினர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்னும் கிடப்பில் உள்ளது.
 
இந்நிலையில், இன்று அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா இன்று நடந்தது. இதில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டு பின்வருமாறு பேசினார். 
 
அவர் கூறியதாவது, அதிமுக அரசின் சட்ட போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது. 
 
காவிரி நீருக்காக போராடியது பலராக இருந்தாலும் தீர்வை பெற்று தந்தது அதிமுகதான். காவிரி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டு நாடகமாடியது திமுக. திமுகவும், கருணாநிதியும் தமிழகத்திற்கு துரோகம் செய்தனர் என தெரிவித்தார்.