1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (16:40 IST)

நீங்கள் கருணாநிதியின் மகன் தான், எங்களுக்கு சந்தேகமில்லை: ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி..!

நீங்கள் கருணாநிதியின் மகன் தான் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை, இந்த சந்தேகம் உங்களுக்கு வர வேண்டாம் என ஸ்டாலினை கலாய்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டமென்று பேசிய போது ’சைக்கிள் ஒட்டி வரும் வீடியோ மற்றும் வெயிட் தூக்கும் வீடியோ ஆகியவற்றை ஸ்டாலின் அடிக்கடி வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார். இந்தியா சார்பில் உலக அளவில் பலுதூக்கும் போட்டிக்கு அவரை அனுப்பலாமா என்று கலாய்த்த எடப்பாடி பழனிச்சாமி இதையெல்லாம் எதற்காக டிவியில் பத்திரிகையில் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள், உங்களது உடல் நன்றாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். 
 
மேலும் அடிக்கடி அவர் நான் கலைஞரது மகன் தெரியுமா என்று கூறுகிறார். இதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை, நீங்கள் கருணாநிதியின் மகன் தான், அந்த சந்தேகம் உங்களுக்கு வராமல் இருந்தால் சரிதான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva