வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (08:30 IST)

அண்ணாமலை குறித்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள்: எடப்பாடி பழனிசாமி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என பத்திரிகையாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் மீதான சொத்து பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் சர்ச்சைக்குரிய தனது ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் சொத்து பட்டியலும் மற்ற கட்சிகளின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை குறித்து கேள்வி கேட்டபோது ’அண்ணாமலை குறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்தார். மேலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக அண்ணாமலை பேசி வருகிறார் என்றும் முதிர்ந்த அரசியல்வாதியின் கருத்து குறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம் என்றும் அண்ணாமலை குறித்து எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva