1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk not participated in all party meeting

10% ஒதுக்கீடு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக?

ADMK
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டி உள்ள நிலையில் இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் ஒன்றும் தீர்ப்பளிக்கப்பட்டது 
 
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த யாரும் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிகே மணி.. உடல்நலம் விசாரித்த முதல்வர்!