வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (12:22 IST)

கோடநாடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படையுங்கள்: எடப்பாடி பழனிசாமி

கோடநாடு வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படையுங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
 
நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் கோடநாடு சம்பவத்தை மட்டும் தான் திட்டமிட்டு பேசுகின்றனர் என்றும் கோடநாடு சம்பவ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக வழக்கறிஞர்கள் தான் என்றும் கோடநாடு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தது தான் அதிமுக என்றும் அந்த குற்றவாளிக்கு ஆதரவாக திமுக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
 
90% வழக்கு விசாரணை முடிந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன் என்ற கேள்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பி உள்ளார்.
 
Edited by Siva