வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:36 IST)

அதிமுக மாநாட்டில் உணவு வீணான விவகாரம்.. கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம்..!

சமீபத்தில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் உணவு வீணாக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 
 
அதிமுக மாநாட்டில் பல இடங்களில் உணவு அளிக்கப்பட்டது என்றும் ஆனால் பார்க்கிங் அருகில் மூன்றாவது கவுண்டரில் உணவு வழங்கப்பட்டதை தொண்டர்கள் பலரும் அறியவில்லை என்றும் மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் கணபதி விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் மீதமுள்ள  உணவுகளை பாத்திரம் ஒப்பந்ததாரர்கள் தான் கொட்டிவிட்டு சென்றனர் என்றும் இதற்கும்  அதிமுக பொறுப்பாளர்களுக்கும் கேட்டரிங் பொறுப்பாளர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் கணபதி விளக்கம் அளித்துள்ளார் 
 
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள சமூக ஆர்வலர்கள் ஏராளமான உணவு வீணாக்கப்பட்டதற்கு அதிமுக நிர்வாகிகளும் கேட்டரிங் பொறுப்பாளர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளனர்.
 
Edited by Siva