செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (17:03 IST)

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டரே அல்ல: டிடிவி தினகரன்

dinakaran
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டரே அல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
திமுகவுக்கு எதிராக உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அப்படி இணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்றும் ஆனால் எடப்பாடிபழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையானது தொண்டரே அல்ல என்பதை பல இடங்களில் அவர் நிரூபித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்குவது தவறு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக அமைச்சர் ஆக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்
 
மேலும் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை என்றும் திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அதற்கு பதிலடி பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran