புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (13:57 IST)

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்! – எடப்பாடியார் கோரிக்கை!

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு குடும்பமே இறந்த நிலையில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால் குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வரப்பட்டாலும் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் மீதான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் காத்திருப்பில் உள்ளது.

இதனை சுட்டிக்காட்டி பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டம் மீது புதிய சட்டவரைவு ஏற்படுத்தி தடை விதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.