1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (10:57 IST)

முல்லை பெரியாறு அணை இடிக்கப்படுகிறதா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய கேரள அரசு..!

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது  என்றும், தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழக அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க கேரள கம்யூனிஸ்ட் அரசு முயற்சி செய்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் அவர் குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தமிழகத்தை பாதிக்கும் வகையில் எந்த முயற்சியையும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran