வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:00 IST)

பரப்புரையின் போது ஸ்டாலினின் புலுகு மூட்டையை அவிழ்த்து விட்ட ஈபிஎஸ்!!

பொங்கல் பரிசாக அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

 
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் ரூ.2500  பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும். 
 
அதிமுகவினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதல்வர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திமுக சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
இஹனைடையே இது குறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற தவறான தகவலை ஸ்டாலின் பரப்ப வேண்டாம் எனவும் கோரியுள்ளார் முதல்வர்.