வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (08:53 IST)

ராஜ்யசபா சீட் கொடுத்தும் நம்ம பக்கம் வரல்லையே.. ஜிகே வாசன் மீது ஈபிஎஸ் கோபம்..!

gk vasan
அதிமுக ஆதரவினால் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்ற ஜிகே வாசன் அதிமுக கூட்டணியில் இடம் பெறாமல் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்க உடன்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் வாக்குறுதி கொடுத்தபடியே ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி அதிமுக கொடுத்த நிலையில் தற்போது அந்த நன்றியை மறந்து அவர் பாஜக பக்கம் சென்று விட்டார் என்று எடப்பாடி பழனிச்சாமி கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் அந்தக் கட்சிக்கு பெரிய அளவு வாக்கு சதவீதம் இல்லை என்பதால் நமக்கு பிரச்சனை இல்லை என்று சீனியர் தலைவர்களிடம் அவர் சமாதானம் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜி கே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதால் தான் கொடுக்கப்பட்டது என்றும் அவர் அப்போதே பாஜக ஆள் தான் என்றும் சீனியர் தலைவர்களை எடப்பாடி பழனிச்சாமி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதிமுகவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பாமக மற்றும் தேமுதிக என்று இருக்கும் நிலையில் அந்த இரண்டு கட்சிகளையும் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருவது எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva