1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (10:01 IST)

எடப்பாடி பழனிசாமி உடல்நலக் குறைவு – கூட்டங்கள் ரத்து !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ள இருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிசாமி நேற்று தண்ணீர்ப் பற்றாக்குறை தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக இருந்தார். ஆனால் திடீரென அவரது உடலநலக் குறைவு ஏற்பட்டதால் அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

சிகிச்சைக்குப் பின்னர் தலைமைச் செயலகம் செல்லாமல் அவர் வீட்டுக்கு திரும்பினார். இதனால் அவர் நேற்றுக் கலந்துகொள்வதாக இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.