1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (18:27 IST)

எடப்பாடி பழனிச்சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை - மேலும் ஒரு வீடியோ

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரில் கோவிலில் அர்ச்சனை செய்யப்படுவது போல மேலும் ஒரு விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது.

 
சமீபத்தில் திரையரங்குகளில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், எடப்பாடி சாமியின் பெயர் அர்ச்சனை செய்யுங்கள் என ஒரு பெண் கூறுவது போலவும், திருப்பதி ஏழுமலையான் உருவத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் உருவம் தெரிவது போலவும் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும் ஆளானது. முதல்வரை கிண்டலடித்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வெளிவந்தன.  எனவே, அந்த விளம்பரம் நீக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள அந்த விளம்பரத்தில், உடல் ஊனமுற்ற ஒரு வாலிபர் தனக்கு வேலை கொடுத்த முதல்வர் பழனிச்சாமியின் பேருக்கு அர்ச்சனை செய்ய சொல்வது போலவும், அய்யர் அர்ச்சனை செய்தவது போலவும் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.