திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (18:47 IST)

செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: அமலாக்கத்துறை

Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத் துறை தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
 
இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva