வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:16 IST)

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் புகார். கவர்னரிடம் அளித்த துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கவர்னரை சந்தித்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஊழல் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் முறையீடு முறைகேடு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே அளித்த புகார்களை மத்திய உள்துறை உடன் அனுப்பி இருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்துள்ளார் 
 
5 அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்எல்ஏ மீது 9 ஊழல் புகார்களை ஆதாரத்துடன் கூடிய பட்டியலை கவர்னரிடம் தந்திருக்கிறோம் என்றும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்றும் ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை அளித்த பின்னர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது