புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (16:32 IST)

பெரியவன் இல்லைங்குறான், எடுபுடி இருக்குங்கிறான்.. என்னயா நடக்குது? துரைமுருகன் கேள்வி!!

சட்டபேரவையில் இருந்து ஏன் வெளிநடப்பு செய்தோம் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். 
 
நேற்று சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
 
இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்றத்தில் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. அதாவது, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாடு என்றும் சரியானது என மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
 
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில் மாஃபா பாண்டியராஜன் உண்மைக்குப் புறம்பான கருத்தை தெரிவிப்பதால் அவர் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் சபாநாயகரை வலியுறுத்தினார்.
 
ஆனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பேச்சில் உரிமை மீறல் ஏதுமில்லை என சபாநாயகர் கூறிய்தால் கடுப்பாகி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசினார் துரைமுருகன், 
 
கொடுக்குறவன் இல்லைங்குறான், இங்க இருக்குற எடுபுடி கொடுப்பேங்குறான். இந்த சபாநாயகர் இருக்குறாரே மகா உத்தமரு, நான் அவர் கிட்டப்போய் கூட சொன்னேன், மத்திய சர்காருக்குத்தான் சார் அந்த பவர் உண்டு அவரே முடியலைங்குறாரேனு.
 
நீங்க வேணா சொல்லுங்க, நாங்க மன்னிச்சு விட்டுறோம்னு கூட சொன்னேன். ஆனா அவர், இல்லை இல்லை அமைச்சர் சொல்றதுதான் சரிங்குறாரு.  இப்பேர்பட்ட வரை என்ன செய்ய முடியும் சொல்லுங்க என தனக்கே உரிய ஸ்டைலில் பேசி நகர்ந்தார் துரைமுருகன்.