Daily Horoscope
✕

அரசு விழாவுல அரசியல் பேசக்கூடாதுன்னு தெரியலை! – அமித்ஷா பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:49 IST)
நேற்று சென்னை வந்திருந்த அமித்ஷா அரசு விழாவில் திமுகவை சாடி பேசியதற்கு திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று அரசு விழாவிற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அரசு விழாவில் பேசிய அமித்ஷா “திமுகவிற்கும், காங்கிரஸுக்கும் ஊழல் குறித்து பேச தகுதி கிடையாது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”அரசுக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் சர்வதிகாரம் தலைதூக்கும். அரசு விழா ஒன்றில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசி சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இது அவர் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு அழகல்ல” என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

நெடுஞ்சாலை துறையில் 2 ஆயிரம் கோடிக்கு பேட்ச் வொர்க்.. திமுக செய்த ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா அதிர்ச்சி...

டம்மி முதல்வரின் சாதனை!.. மூடர் கூட்ட ஆட்சி!.. உதயநிதி பதிவு!..

முதல் வகுப்பு சிறை!.. என்னென்ன வசதிகள்?.. வாங்க பார்ப்போம்!...

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 5 பேர் கைது: மீதி 12 பேர் எங்கே?

புழல் சிறையில் அன்பில் மகேஸை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! என்ன பேசினார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments