கட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற வைகோ மகன்!
மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் சற்றுமுன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 20ஆம் தேதி மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்த நிலையில் அதில் துரை வையாபுரிக்கு மதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுப்பது குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடந்தது
இந்த ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு கழக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட துரை வையாபுரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சென்று வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் பெரியார் நினைவிடம், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வைகோ மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.