ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (18:20 IST)

மனைவி என நினைத்து மகனை கொலை செய்த கொலை செய்த போதைநபர்: கடலூரில் பரபரப்பு

murder
கடலூர் மாவட்டத்தில் மனைவி என நினைத்து மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த  போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போதை நபர் ஒருவர் மனைவி என நினைத்து 14 வயது மகன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்
 
கடந்த சில நாட்களாக முருகன் என்பவரும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. முருகன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், அவரது மனைவி தராததால் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் முழு போதையில் வந்த முருகன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் அர்ஜூன் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். மனைவி என நினைத்து மகன் மீது கல்லை போட்டு கொலை செய்த முருகன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
கல்லை தலையில் போட்டதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே முருகன் மகன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது.