தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் முருங்கை விவசாயம் என்றால் அது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிதான். அந்த அளவிற்கு விவசாயிகளுக்கு ஆதார வருவாயை இந்த வறட்சி பூமி கொடுக்கின்றது.
அரவக்குறிச்சி தொகுதியில் மலைக்கோவிலூர், தடாகோயில், கரடிப்பட்டி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம், நடையனூர், வெஞ்சமாங்கூடலூர், ஆர்.வெள்ளோடு, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் முருங்கை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.
மானாவாரி அதாவது வானம் பார்த்த பூமியில் அவ்வபோது பெய்யும் மழையையும், ஈரப்பதத்தையும் கொண்டு அறுவடை செய்யப்படும் இந்த முருங்கையானது கடந்த. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் ஒரு கட்டு ரூ 5 முதல் ரூ 10 வரைக்கு சென்றது.
இப்போது ஒரு கட்டு ரூ 150 லிருந்து ரூ 200 வரைக்கும் விலை செல்கின்றது. ஒரு கட்டுக்கு சுமார் 25 லிருந்து சுமார் 30 வரைக்கும் முருங்கைகள் அடங்கி இருக்கும், இதுவே ஒரு கட்டு என்று கட்டி விற்கப்படுகின்றது.
இந்நிலையில் முருங்கை விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிரந்தர விலை கிடைப்பதில்லை என்றும், இங்கிருந்து அறுவடை செய்யப்படும் முருங்கை காய்கள் வியாபாரிகள் மூலமாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சென்று, அங்கிருந்து கல்கத்தா, டில்லி, பம்பாய் மற்றும் இதர பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றது.
வருடத்திற்கும் நான்கு காப்பு உள்ள நிலையில் மூன்று மட்டுமே கிடைக்கின்றது. பருவ நிலை கொண்டு காய்கள் பிடிப்பதாகவும், கூறும் விவசாயிகள், இதுவரை ஆண்ட கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் எங்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது தான் இந்த அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் முடிந்துள்ளதாகவும், இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கத்தில் அரசு இருந்தாலும், அந்த ஒரு வார துக்கத்திற்கு பிறகு விவசாயிகள் படும் துக்கத்தை, அதே முதல்வர் ஜெயலலிதா பாணியில் செய்ய வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த அரவக்குறிச்சி தொகுதி வறட்சி நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் இங்குள்ள மண்ணின் ரகத்திற்கு ஏற்ற வாறு முருங்கைகளில் செடி முருங்கை, கொடி முருங்கை, மரமுருங்கை என்று மூன்று ரகங்களில் சாகுபடி செய்யப்பட்டும், இந்த மூன்று முருங்கைகளில் காய்க்கும் முருங்கையில் மூன்றுமே தனிதனிச் சுவைகளை கொண்டிருக்கும்,
இந்த மூன்று முருங்கைகளும் தான் அரவக்குறிச்சியை தொகுதியையும், அரவக்குறிச்சி விவசாயிகளின் வருவாய், மற்றும் ஆதார வருவாய் என்றே கூறலாம், மேலும் செடி முருங்கை மட்டுமே அதிகமாக பயிரிடப்படுள்ளது ஆகவே மத்திய மற்றும் மாநில அரசு, ஒரு வார அரசு துக்கத்தை ஏற்ற பின்பு விவசாயிகளின் கஷ்டத்தையும் உணர வேண்டுமென்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்