வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (08:11 IST)

மும்பை - ராணிப்பேட்டை.. கூரியரில் இருந்து போதை பொருள்: அதிர்ச்சியில் போலீசார்..!

மும்பையில் இருந்து ராணிப்பேட்டைக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் வந்து அந்த போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசார் கண்டுபிடித்து உள்ளதால் அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில் போதைப்பொருள் விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்ட பூஷன பிரியன், ராஜ்குமார், சரவணன் ஆகிய 4 பேர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது ஒன்றரை கிலோ கஞ்சா உள்பட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் கைதான நான்கு பேர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது மும்பையில் இருந்து போதைப் பொருள்கள் கூரியர் சர்வீஸ் மூலம் வரவழைக்கப்பட்டதாகவும் அந்த போதைப் பொருள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது. 
 
இதனை அடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று சொல்லி
 
Edited by Siva