திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (20:15 IST)

கமலின் கட்சியில் திராவிடம் காணாமல் போனது ஏன்?

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல் கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை ஏற்றினார். 
 
ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சியின் பெயரிலேயே திராவிடத்தை முன்நிறுத்தும் நிலையில், கமலின் கட்சி பெயரில் திராவிடம் காணமல் போனது. இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்... பார்ப்போம்...
 
கமல் அரசியலுக்கு நுழையும் முன்னர் தனது அரசியல் திராவிட அரசியலாக இருக்கும் என கூறியிருந்தார். மேலும், திராவிடத்தை முன்நிறுத்தியே தனது அரசியல் பயணம் இருக்கும் எனவும் கூறியிருந்தார். திராவிடத்தை பற்றி கமல் பேசியிருந்தாலும் அவர் தன்னை காந்தியவாதியாக முன்னிலைப்படுத்தியவர். 
 
எனவே, திராவிடத்திற்குள் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பாமல்,  காந்திய கொள்கை அடிப்படையில் அவர் தேசியத்தை மையப்படுத்துவார் என்பது இதன் மூலம் வெளிபடுவதாக தெரிகிறது.